06 June 2023

மோதாதே மோதாதே நொறுங்கிப் போவாய்

மோதாதே மோதாதே நொறுங்கிப் போவாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                    மோதாதே மோதாதே நொறுங்கிப் போவாய்

                        கன்மலையாம் கிறிஸ்து என் அடைக்கலமே

                        எனக்காக பிளக்கப்பட்ட கன்மலை இயேசு

                        மோதினால் நீயே நொறுங்கிப் போவாய்

 

1.         கன்மலையின் வெடிப்பில் என்னை மறைத்து

            கருத்தாய் மூடும் தேவன் அவர்

            கரம்பிடித்து என்னை நித்தம் நடத்தி

            கன்மலைமேல் என்னை நிறுத்திடுவார்

 

2.         கர்த்தரே என்றும் அடைக்கலமே

            கோட்டை அரணும் தஞ்சமானவர்

            செட்டைகளில் என்னை நித்தம் மறைத்து

            சேதங்கள் அணுகாமல் காத்திடுவார்

 

3.         கர்த்தரே என்றும் புகழிடமே

            இக்கட்டில் அரணான கன்மலையவர்

            கனிகளின் வரங்களால் நித்தம் நிறைத்து

            கிருபையாய் என்னை தாங்கிடுவார்

 

4.         கர்த்தர் என் வெளிச்சம் இரட்சிப்பானவர்

            எந்தன் ஜீவனின் பெலனானாரே

            முகத்தின் வெளிச்சத்தில் நித்தம் நடத்தி

            மகிமையாய் என்னை உயர்த்திடுவார்

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...