07 June 2023

அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்

                        அப்பா உங்க நினைப்பிலதான் உயிர் வாழனும்

                        என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா

                        என் மனசு நிறைந்த செல்வம் இயேசப்பா

 

1.         என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர்வாழ்வதும் ஏனோ

            உங்க உசிரகொடுத்து பாவி எனக்கு உயிர்தந்ததும் ஏனோ

            கண்ணுக்குள்ள பொத்தி வைச்சி காத்து வந்ததும் ஏனோ

            கால்கள் இரண்டும் இடறிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ-என்

 

2.         உங்கள் உள்ளங்கையில் என்னை வரைந்து பார்த்துக்கிட்டதும் ஏனோ

            உங்க கைகள் இரண்டிலும் ஆணி அடிக்க பொறுத்துக்கிட்டதும் ஏனோ

            தூங்காமல் உறங்காமல் காத்துக் கொண்டதும் ஏனோ

            வழி எல்லாம் நிழல்போல கடந்து வந்ததும் ஏனோ-என்

 

3.         பாவிகள் மேல நீங்க வைச்ச பாசம் புரியல

            நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல

            உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு

            ஒடைந்து நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு

 

 

- Eva. J. Daniel

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...