உங்க சமூகம் என் முன்னால் செல்லுதே

உங்க சமூகம் என் முன்னால் செல்லுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          உங்க சமூகம் என் முன்னால் செல்லுதே

            நான் கலங்க மாட்டேன் நன்றி சொல்லிடுவேன்

            உங்க பிரசன்னம் என் முன்னால் செல்வதால்

            என் பாதையெல்லாம் ஒளியாய் பிரகாசிக்குதே

 

                        என் சூழ்ந்து நிற்கின்றிர் நிழலாய் வருகின்றீர்

                        என்னுள்ளே வாசம் செய்து பாதுகாக்கின்றீர்

 

1.         பராக்கிரம தளபதியாய் என்முன் செல்வதால்

            எதிரிகள் என்முன் வராமல் தடுக்கின்றீர்

            அற்புதராய் பறிகாரியாய் என்னுள் இருக்கின்றீர்

            வாதை துன்பம் நோய் வராமல் பாதுகாக்கின்றீர்

 

2.         பரிசுத்த கர்த்தராய் என் முன்னால் செல்வதால்

            பாவ சாப மாமிச இச்சை அனுகாமல் காக்கின்றீர்

            இஸ்ரவேலின் தேவனாய் என் முன் செல்கின்றீர்

            வாக்குத்தத்தம் தந்து என்னை ஆசீர்வதிக்கின்றீர்

 

3.         அக்கினி பட்டயமாய் என்முன் செல்வதால்

            சோதனை அக்கினியில் அவியாமல் நடத்துகின்றீர்

            வறண்ட நிலத்தில் நடக்கும் போது நீரூற்றாய் வருகின்றீர்

            தாகம் தீர்த்து கண்மலை மேல் என்னை நிறுத்துகின்றீர்.

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு