07 June 2023

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்

சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                    சிங்கார மாளிகையில்

                    ஜெயகீதங்கள் பாடிடுவோம்

                        சீயோன் மணவாளனுடன்

 

1.         ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து

            ஆறுதலடைந்திடுவோம் - அங்கே

            அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி

            அன்பரில் மகிழ்ந்திடுவோம்

 

2.         துயரப்பட்டவர் துதித்துப் பாடுவார்

            துதியின் உடையுடனே - அங்கே

            உயரமாம் சீயோன் உன்னதருடனே

            களித்து கவி பாடுவோம்

 

3.         முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்

            திருமுகம் கண்டிடுவோம் - அங்கே

            முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி

            தரித்தோராய் துதித்திடுவார்

 

4.         பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி

            புன்னகை பூத்திடுவோம் - புது

            எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்

            மண்ணாசை ஒழித்திடுவோம்

 

5.         அவருரைத்த அடையாளங்களெல்லாம்

            தவறாமல் நடக்கிறதே - அவர்

            வரும் வேளை அறியாதிருப்பதால்

            எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

 

6.         குருசை சுமந்த பரிசுத்தர் முன்னால்

            குருத்தோலை பிடித்திடுவோம் - அங்கே

            கற்புள்ள கறைபடா கர்த்தரைப் பின்பற்றினோர்

            மீட்பின் கீதம் பாடுவோம்

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...