ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தை பரிசளிப்பேன்
ஞானியாகப்
பிறந்திருந்தால்
ஞானத்தை பரிசளிப்பேன்
ஆயனாகப்
பிறந்திருந்தால்
மந்தையைப்
பரிசளிப்பேன்
பெத்தலை
பிறந்த பாலகனே
உமக்குப் பரிசளிக்க
சிறந்தது
என்று என்னிடம்
ஏதும் இல்லையே
என்னையே
தருகின்றேன்
என்னையே தருகின்றேன்
படைக்கின்றோம்
படைக்கின்றோம்
எங்களை காணிக்கையாய்
ஆயர்
ஞானியர் படைத்தது
போல் சிறந்ததை
படைக்கின்றோம்
எங்களைப்
படைக்கின்றோம்
1. சத்திரத்தில்
இடமில்லை தொழுவம்தான்
கிடைத்ததோ
வான்புவி
படைத்த ராஜனுக்கு
புல்லணைதான்
மெத்தையோ
என் சிறு
உள்ளம் தருகின்றேன்
பாலா நீர் பிறந்திட
என்றும்
நீர் தங்கும் ஆலயமாய் என்
உள்ளம் விளங்கட்டும்
என்னையேத்
தருகின்றேன்
என்னையேத்
தருகின்றேன்
2. என்னைத்
தேடி இப்புவி
வந்தீர் உம்மைப்
பணிகின்றேன்
என்னை உமக்கென முன்குறித்தீர்
நன்றி செலுத்துகிறேன்
தாலந்து
திறமை அனைத்தையுமே
உம் பாதம் அர்ப்பணித்தேன்
கல்வி,
ஞானம் எல்லாமே
உம் நாம மகிமைக்கே!
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment