இயேசு போதும் இயேசு போதும்

இயேசு போதும் இயேசு போதும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசு போதும் இயேசு போதும்

                        எனக்கு இயேசு போதும்

                        எச்சூழலிலும் வழிநடத்த வல்ல

                        இயேசு எனக்கு போதும்

 

1.         எதிராய் செங்கடல் வந்திட்டாலும்

            இயேசுவின் நாமத்தில் பிளந்திடுவேன்

            எதிராய் செங்கடல் வந்திட்டாலும்

            இயேசுவின் நாமத்தில் விலகிடுமே

            செங்கடலை பிளந்து அக்கரைச் சேர்ந்து

            சத்துருவின் அழிவைக் காண்பேன்.

 

2.         புரண்டோடும் யோர்தான் எதிர்த்திட்டாலும்

            இயேசுவின் நாமத்தில் வென்றிடுவேன்

            யோர்தானை ஜெயித்து அக்கரைச் சேர்ந்து

            ஜெயக்கொடி ஏற்றிடுவேன்

 

3.         எரிகோ தடையாக நின்றிட்டாலும்

            இயேசுவின் நாமத்தில் தகர்ந்திடுமே

            மதில்களை தாண்டி சேனைக்குள் பாய்ந்து

            சத்துருவை மடங்கடிப்பேன்.

 

4.         சிங்கம்போல் சத்துரு கெர்ஜித்தாலும்

            இயேசுவின் நாமத்தில் கட்டிடுவேன்

            சர்ப்பங்கள் மேலேறி மிதித்து வீழ்த்தி

            சத்துருவை மேற்கொள்ளுவேன்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

w

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு