08 June 2023

என் உள்ளம் நன்றியால் நிறைந்தே

என் உள்ளம் நன்றியால் நிறைந்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் உள்ளம் நன்றியால் நிறைந்தே

            என் தேவனில் மகிழ்ந்திடுதே - 2

            மாறிடா அடைக்கலம் நீரே

            என்றுமே என் தஞ்சமம் நீரே - 2

            உம் சிறகதின் நிழலில்

            மறைத்து என்னை காத்த நீரே - 2

 

                        நீதியின் கிரீடமும் கனமும்

                        நீங்கிடா மறைவிட நிழலும் - 2

                        இயேசுவே நீர் எந்தன் ஜீவனின் ஊற்றே

                        என்றும் என் புகழிடமே

 

1.         சேய் போல என்னையும் சுமந்தே

            தாய்போல அரவணைத்தீரே - 2

            கானமாம் இந்த புவியில்

            கலங்கியே தவித்த அவ்வேளை - 2

            கண்ணுறங்கா தென்னையே

            கருத்துடன் காத்த நீரே - 2

 

2.         மழைபோல இன்னல்கள் பெருகி

            அலைபோல சீறி வந்திடினும் - 2

            அளவில்லா கிருபைகள் பகர்ந்தே

            அசைந்திடா தென்னையுமே பத்திரமாய் - 2

            அன்னலை நிலை நிறுத்தி

            அற்புத ஜெயம் ஈந்தீரே - 2

 

3.         எக்காளம் தொனித்திடும் நேரம்

            இக்கால பாடுகள் தீரும் - 2

            ஏகிடுவேன் உந்தன் சமூகம்

            கண்டிடுவேன் உந்தன் வசனம் - 2

            நீங்கிடா தென் உள்ளமே

            ஆனந்த நாள் அதுவே - 2

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...