23 June 2023

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    இயேசு கிறிஸ்துவின் நாமமிதே

                        இனிமையாமே இன்பமதுவே

                        ஏழைக்கும் ஆறுதலே

 

1.         நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே

            நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே

            நாதன் இயேசுவின் நாமமதையே

            நன்றியுடன் புகழ்வோம் - இயேசு

 

2.         அளிப்பேன் யாவுமே

            என் நாமத்தில் என்றனரே

            அழித்த வலியவனை வல்லமையுண்டதிலே

            களிப்போம் வல்ல நாமத்திலே

            கனிந்தே பாடிடுவோம் - இயேசு

 

3.         நோய்கள் நீக்கிடவும்

            நவ பாஷைகள் பேசிடவும்

            சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்துதவும்

            உத்தமர்கள் போற்றிப் புகழும்

            கர்த்தரின் நாமமதே - இயேசு

 

4.         சாவுக்கேதுவான கொடும்

            நஞ்சைப் பருகிடினும்

            சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே

            நாதன் ஈந்த தைலமெனவே

            நமக்காய் ஊற்றுண்டதே - இயேசு

 

5.         பாவ இருள்தனை போக்கும்

            புண்ணிய நாமமதாய்

            பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே

            இயேசு கிறிஸ்துவே நேசரிவரே

            ஆசைக்குகந்தவரே - இயேசு

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...