23 June 2023

சொந்தம் என்று உலகினிலே உறவு என்று யாருமில்லை

சொந்தம் என்று உலகினிலே உறவு என்று யாருமில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    சொந்தம் என்று உலகினிலே உறவு என்று யாருமில்லை

                        கருவில் சுமந்தவரே இயேசையா

                        நீரே என் உறவுதானைய்யா என் இயேசைய்யா

                        மாயை மாயை உலகெல்லாம் மாயை

                        எல்லாமே மனதுக்கு சஞ்சலமாமே

 

1.         மனிதனோ முகத்தை பார்க்கிறான்

            தேவனோ உள்ளத்தை பார்க்கிறார்

            நினைவெல்லாம் நிறைந்தவரே இயேசையா

            உம்மையன்றி உறவு என்று யாரும் இல்லையையா

            என் சொந்தம் நீரே என் சுகமும் நீரே

            என் ஆறுதல் நீரே என் உயிரும் நீரே

 

2.         பார்க்கும் இடமெல்லாம் ஜீவனாக வருபவர்

            யாக்கோபை போலவே ஒப்புரவை நாடுகிறேன்

            என்னை மறவாத தேவன் நீரையா

            என்னை அணைக்கும் அன்பு தெய்வம் நீரையா

            என் தேவனும் நீரே என் ஜீவனும் நீரே

            என் தகப்பனும் நீரே என் தாயும் நீரே

 

3.         கண்ணீர் விட்டாலும் கதறி அழுதாலும்

            திரும்பி பார்க்காத மனித உறவுகள்

            என் காயம் கட்டுகின்ற சமாரியன் நீரே

            உம் மார்பில் தலை சாய்ந்து இழைப்பாறுவேன் நானே

            சிநேகிதர் நீரே மீட்பரும் நீரே

            பேச்சும் நீரே என் மூச்சும் நீரே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...