23 June 2023

நிம்மதி வேண்டும் நிகரற்ற தேவா

நிம்மதி வேண்டும் நிகரற்ற தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    நிம்மதி வேண்டும் நிகரற்ற தேவா

                        நிம்மதி வேண்டுமையா

                        நிலையில்லா உலகினில் நிம்மதி வேண்டும்

                        நீர் அன்றி கதியேதையா

                        என் நிம்மதி நீர்தானையா

 

1.         காலை மாலை வேளையிலும்

            காப்பேன் என்றீரைய்யா

            வெள்ளம்மேல் நிந்தை மேற்கொள்ளும்போது

            கலங்கி நின்றேன் ஐயா

            மனம் கலக்கம் கொண்டேனைய்யா

 

2.         அன்னாளின் கண்ணீரைத் துடைத்தவரே

            என்னையும் பாருமைய்யா

            என் ஆவி ஆத்மா சரீரம் யாவும்

            உமக்கே அர்ப்பனித்தேன்

            என் நிந்தையை மாற்றும் ஐயா

 

3.         உனக்கு எதிராக ஆயுதங்கள்

            வாய்க்காது என்றவரே

            பயப்படாதே உன் தேவன் நானே

            உன்னோடே இருப்பேன் என்றீர்

            உமக்கு நன்றி நன்றி ஐயா!

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...