தாவீதைப்போல் ஆடுவோம் தோத்தரித்து பாடுவோம்

தாவீதைப்போல் ஆடுவோம் தோத்தரித்து பாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாவீதைப்போல் ஆடுவோம் தோத்தரித்து பாடுவோம்

            நன்றி கூறுவோம் நடனம் ஆடுவோம்

                        ஞானம் தந்தது யார்? நல்ஞானம் தந்தது யார்?

                        குழலை தந்தது யார்? தீங் குழலை தந்தது யார்?

                        எங்கள் தேவன் இயேசு அல்லவோ

                        தேன் மதுர நாமம் சொல்லுவோம்

 

1.         ஆர்ப்பரிப்போமே அகமகிழ்வோமே எக்காளத்தை முழக்கிடுவோமே

            தம்புருவோடும் நடனங்களோடும் எக்காலமும் துதித்திடுவோமே

            கின்னரங்கள் வாசிப்போம் இயேசு மன்னவரை வாழ்த்துவோம்

            வீணைகளை மீட்டுவோம் தினம் இயேசு புகழ் சாற்றுவோம்

                        புத்தம் புது பாடல்கள் பாடுவோம்

                        நித்தம் அவர் அருளை நாடுவோம்

 

2.         தீங்குழலாலே தேன்குழலாலே கெம்பீரித்துப் பாடிடுவோமே

            ஏழிசையாலே யாழிசையாலே தோத்தரித்து போற்றிடுவோமே

            கேருபீன்கள் போற்றுது சேரபீன்கள் போற்றுது

            சேனையெல்லாம் போற்றுது எங்கள் சுவாச மலரை போற்றுது

                        புத்தம் புது பாடல்கள் பாடுவோம்

                        நித்தம் அவர் அருளை நாடுவோம்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு