ஒப்புக் கொடுத்தீர் ஐயா

ஒப்புக் கொடுத்தீர் ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஒப்புக் கொடுத்தீர் ஐயா

                        உம்மையே எனக்காக

                        உலகின் இரட்சகரே

                        உன்னத பலியாக

 

1.         எங்களை வாழவைக்க

            சிலுவையில் தொங்கினீர்

            நோக்கிப் பார்த்ததினால்

            பிழைத்துக் கொண்டோம் ஐயா - ஒப்புக்

 

2.         நித்திய ஜீவன் பெற

            நீதிமானாய் மாற

            ஜீவன் தரும் கனியாய்

            சிலுவையில் தொங்கினீர் - ஒப்புக்

 

3.         சுத்திகரித்தீரே

            சொந்த ஜனமாக

            உள்ளத்தில் வந்தீர் ஐயா

            உமக்காய் வாழ்ந்திட - ஒப்புக்

 

4.         பாவத்திற்கு மரித்து

            நீதிக்கும் பிழைத்திட

            உம் திரு உடலிலே

            என் பாவம் சுமந்தீர் ஐயா - ஒப்புக்

 

5.         மீட்கும் பொருளாக

            உம் இரத்தம் தந்தீர் ஐயா

            சாத்தானை தோற்கடித்து

            சாவையும் வென்றீர் ஐயா - ஒப்புக்

 

6.         என்னையே தருகிறேன்

            ஜீவபலியாக

            உகந்த காணிக்கையாய்

            உடலைத் தருகிறேன் - ஒப்புக்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு