ஒருநாளும் வீணாகாது நீ ஓடும் ஓட்டம்

ஒருநாளும் வீணாகாது நீ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   ஒருநாளும் வீணாகாது

                   நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்

                        ஒரு நாளும் வீணாகாது

 

1.         கர்த்தரே உனக்குள்ளே

            செயலாற்றி மகிழ்கின்றார்

            அவர் விருப்பம் நீ செய்திட

            ஆற்றல் தருகின்றார் - தொடர்ந்து

 

                        தொடர்ந்து ஓடு விட்டு விடாதே

                        பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே

 

2.         பிடித்துக் கொள் ஜீவ வசனம்

            பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்

            நெறி கெட்ட சமுதாயத்தில்

            நீதானே நட்சத்திரம் - தொடர்ந்து

 

3.         அவமானம் நிந்தை எல்லாம்

            அனுதின உணவு போல

            பழிச் சொல் எதிர்ப்பு எல்லாம்

            பெலன் தரும் ஊட்டச்சத்து - தொடர்ந்து

 

4.         கண்களை பதித்து விடு

            கர்த்தராம் இயேசுவின் மேல்

            சிலுவை சுமந்ததனால்

            சிங்காசனம் அமர்ந்து விட்டார் - தொடர்ந்து

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு