வாழ வேண்டும் பரமனே
பல்லவி
வாழ வேண்டும் பரமனே
உமது வழியில்
உமது ஒளியில்
வாழ வேண்டும் பரமனே
அனுபல்லவி
தீயர் வழியில் நடந்திடாமல்
கயவரோடு கலந்திடாமல்
வீணரோடு இசைந்திடாமல்
உந்தன் வேதம் நெஞ்சில் ஏற்றி
சரணங்கள்
1. உமது வேதம் எனது தியானம்
ஆத்ம நேசம் ஆகணுமே
நதியருகே கனி மரமென
நிலைத்து வாழ அருளே
வேர்கள் ஊன்றி பசுமை தாங்கி
வளர்ந்து ஓங்கும் தருவாய் மாறி
செய்வதெல்லாம் என்றும் வாய்க்க
சீரும் சிறப்பும் என்றும் நிலைக்க
2. தேவரீர் நீர் எனது தீபம்
இருளை வெளிச்சம் ஆக்கிடுவீர்
சேனைக்குள்ளும் பாய்ந்திடுவேனே
மதிலும் தாண்டி வெல்வேன்.
வலது கரத்தால் என்னைத் தாங்கி
மானின் கால்கள் எனக்கு அருளி
கன்மலை மேல் நிறுத்துவீரே
காருண்யரே உம்மைத் துதிப்பேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment