ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா

          பரிசுத்தரின் பாதத்தில் அர்ப்பணிப்போமா - 2

 

                        மனதார வாழவைப்பார் மகிமையின் தேவனவர்

                        பரலோகம் சேர்த்திடுவார் பரலோக ராஜனவர் - 2

                        துதியும் கனமும் மகிமை செலுத்தி பாடி கொண்டாடு - 2

 

1.         மனுக்குல மீட்புக்காக வந்தவரும் இவரே

            பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவேரே - 2

            பரலோக வாசலை திறந்தவர் இவரே

            நித்திய ஜீவனை தந்தவரும் இவரே - 2

 

2.         உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே

            நீதியின் சூரியனாய் வந்தவரும் இவரே - 2

            பாவ இருளை நீக்கியவர் இவரே

            பரிசுத்த வாழ்க்கை தந்தவரும் இவரே - 2

 

3.         வானிலும் பூமியிலும் உயர்ந்தவர் இவரே

            எல்லா நாமத்திலும் மேலான நாமமே - 2

            பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே

            வல்லமையுள்ள தேவனும் இவரே - 2

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு