15 June 2023

எனக்காய் யாவும் செய்து முடித்த

எனக்காய் யாவும் செய்து முடித்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                      எனக்காய் யாவும் செய்து முடித்த

                        உன்னத தேவனே

                        சிலுவையில் எல்லாம்

                        செய்து முடித்தீரே - எனக்காய்

 

1.         என்மேல் விழுந்த சாபத்தை

            நீர் ஏற்றுக் கொண்டீரே

            ஆசீர்வாதம் என் மேல் வைத்தீரே

            பூமியில் உயர்ந்த இடத்தில்

            உயர்த்தி வைத்தீரே

 

2.         என் மேல் விழுந்த தரித்திரத்தை

            ஏற்றுக் கொண்டீரே

            ஐஸ்வரியவனாய் மாற்றி விட்டீரே

            சகல ஜனங்களுக்குள் என்னை

            உயர்த்தி வைத்தீரே

 

3.         என் மேல் விழுந்த வியாதியை

            நீர் ஏற்றுக் கொண்டீரே

            நிரந்தர சுகத்தை தந்துவிட்டீரே

            என்னை தழும்புகளால் குணமாக்கிவிட்டீரே

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...