ஒளி தரும் தீபங்கள்

ஒளி தரும் தீபங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஒளி தரும் தீபங்கள்

                        சுடர் வீசும் தீபம் நாம்

                        கலங்கரை விளக்கைப் போல்

                        இயேசுவில் ஒளி பெறுவோம்     

 

1.         மலைமேல் ஜெலித்திடும் மாநகர் போலவே

            மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம்

            ஆண்டவர் இயேசுவின் உறவினில் நெருங்கிட

                        அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம்

 

2.         இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர்

            அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம்

            வார்த்தையைப் பிடித்துமே சுடர்களைப் போலவே

                        எழும்பிப் பாரினில் சுடரை வீசுவோம்

 

3.         அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும்

            ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம்

            சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட

                        துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம்

 

4.         பரிசுத்தவான்களே ஒளியில் வாசமே

            சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட

            இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே

                        ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்

 

5.         நானே வெளிச்சமும் நானே வழி என்றார்

            அனுதினம் அதிகமாய் அவரை சார்ந்துமே

            இயேசுவின் வழியினில் என்றும் நடந்திட

                        மகிமை ஒளியினை அடைந்து செல்லுவோம்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு