எத்தனை தடவத்தான் கொண்டாடினாலும்

எத்தனை தடவத்தான் கொண்டாடினாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எத்தனை தடவத்தான் கொண்டாடினாலும்

            போரடிக்காது கிறிஸ்மஸ் போரடிக்காது

                        ஆனந்தமா கொண்டாடு

                        ஆடிப்பாடி கொண்டாடு

                        நேசத்தோடு கொண்டாடு

                        நெஞ்சில் கொண்டாடு

 

1.         தாகம் கொண்ட மனசுக்கு

            தவிச்சி போன உசுருக்கு

            தயவு கொண்ட இயேசு முகம் போரடிக்குமா?

            ஆண்டவரின் அன்பையே

            அளவில்லாமல் கொண்டுவரும்

            தேவ மகன் பிறப்பு போரடிக்குமா?

            மகிழ்ச்சியோடு கொண்டாடு

            மனசு நிறைஞ்சி கொண்டாடு

            வாழ்த்துச் சொல்லி கொண்டாடு

            வணங்கி கொண்டாடு

 

2.         ஏழைகளின் மனசுல இடம்பிடிக்க வந்தவரு

            இயேசு தெய்வம் என்ற செய்தி போரடிக்குமா

            பாமரனின் வாழ்க்கைய பாசத்தோடு பகிர்ந்துகிட்டு

            நேசம் தரும் இயேசு பிறப்பு போரடிக்குமா

            ஏழையோடு கொண்டாடு

            இறக்கத்தோடு கொண்டாடு
            பாசத்தோடு கொண்டாடு

            பகிர்ந்து கொண்டாடு

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு