ஓசன்னா தாவீதின் புதல்வா

ஓசன்னா தாவீதின் புதல்வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

160.

 

                   ஓசன்னா! தாவீதின் புதல்வா

                        ஓசன்னா! ஓசன்னா!

 

1.         ஆயிரக் கணக்கான வருடங்களாய் - எம்

            ஆண்டவ ரேஉம்மை எதிர்பார்த்தோம்

            இசரவேல் சனங்களை ஆளவரும் - எம்

            இயேசு இரட்சகரே எழுந்தருளும்.

 

2.         தாவீ தரசனின் புத்திரரே - ஒரு

            தெய்வீக முடியோடு வர்தவரே

            தர்ம ரெனப்புக ழடைந்தவரே - எம்

            தேவாதி தேவனே வருவீரே.

 

3.         கோவேறிக் குட்டியே வாகனமாய் - சிறு

            குழந்தைகள் துணியே பஞ்சணையாய்

            இலைகளே உமது செயக்கொடியாய் - எம்

            இறைவனே இன்புறச் செய்வீரே.

 

4.         குருடர் அநேகர் ஒளிபெற்றார் - முடம்

            கூன்குரு டர்செவிடர் சகாயம்பெற்றார்.

            குட்டர் அநேகர் நலம் பெற்றார் - எம்

            மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே.

 

5.         உலகமே உமது அரிய வேலை - எம்

            உயிருமே உமது மாபுதுமை

            உலகத்தை யாண்டு வருபவரே - எம்

            உலகரசே! உள்ளே புகுவீரே.

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு