06 June 2023

என்னைக் கொண்டு என்ன செய்ய

என்னைக் கொண்டு என்ன செய்ய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          என்னைக் கொண்டு என்ன செய்ய

                        சித்தமாய் இருக்கிறீர்.

            எங்கு செல்ல என்ன சொல்ல 

                        சொல்லித்தாரும் தகப்பனே.

            சொல்லி சொல்லி உம் அன்பை

                        ருசித்திட வேண்டும்  

            பேசி பேசி உம் அன்பை பகிர்ந்திட வேண்டும் - 2

 

1.         எனக்கு நீர் தந்த அபிஷேகம் அது

                        நுகங்களை முறித்திடட்டும்

            எனக்கு நீர் தந்த கிருபை அது

                        பிறருக்காய் பயன்படட்டும்.

            மெழுகு போல நான் உருகி பிறர்

                        வாழ்ந்திட ஒளி தர வேண்டும்.

            பிறர் வாழ்ந்திட ஒளி தர வேண்டும் - 2

 

2.         பட்சிக்கும் அக்கினி நீரே பாவங்களைச்

                        சுட்டெரித்திடும்

            அநியாயத் தீர்ப்பு நீங்கி நியாயத் தீர்ப்பு

                        நிறைவேறட்டும்

            உமக்கு முன்பாக நிற்கும் பாத்திரமாய்

                        மாற வேண்டும்.

            பாத்திரமாய் மாற வேண்டும் - 2

 

3.         நீர் செய்ய நினைத்த காரியம் ஒன்றுமே

                        தடை படாது

            பூத்து குலுங்கும் மரமாய் பிறருக்கு நிழல்

                        தர வேண்டும்

            தேசம் துளிர் விட்டுச் செழிக்க உம்

                        இரக்கம் வேண்டும் ஐயா

            உம் இரக்கம் வேண்டும் ஐயா - 2

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...