06 June 2023

காருண்ய நாதா காண்கின்ற தேவா

காருண்ய நாதா காண்கின்ற தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                   காருண்ய நாதா காண்கின்ற தேவா

                        கல்வாரி சிநேகத்தால் அழைத்தவரே

                        கிருபையினால் எம்மை மீட்டெடுத்தவரே

                        கண்டுக்கொண்டேன் உந்தன் அன்பினையே

 

1.         குயவனின் கரங்களில் களிமண்ணைப் போல

            எம்மை உம் கரங்களில் தந்துவிட்டோம்

            உமக்கேற்ற பயனுள்ள பாத்திரமாக

            வணைந்தெம்மை நடத்திடும் பாக்கியமே.

 

2.         மணவாட்டியின் மேல் மகிழ்வது போல

            மணவாளனே எம்மை சிநேகித்தீரே

            தகப்பனைப் போல் எம்மை சுமந்திடும் தேவா

            தாயைப்போல் தேற்றிடும் சிலாக்கியமே.

 

3.         நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போல

            ஒத்தாசை அனுப்பியே செழிக்கச் செய்யும்

            வற்றாத நீரோற்றைப் போல எம் வாழ்வை

            அனுதினமும் போசித்து நடத்திடுமே

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...