எந்தன்
தாழ்வில்
என்னை நினைத்தவரே
உந்தன்
நாமம் உயர்த்திடுவேன்
- 2
எண்ணில்
அடங்கா நன்மைகள்
செய்தவரே
நன்றியாலே
துதித்திடுவேன்
- 2 - எந்தன் தாழ்வில்
1. கடந்த நாட்களில்
கண்ணின் மணிபோல்
கருத்துடன்
நீர் காத்தீரே
- 2
கடந்து
வந்த பாதையில்
தினமும்
கரம் பிடித்தீர்
அதிசயமாய் - 2
இயேசுவே
இரட்சகா
ஆசையோடே
வாழ்த்துகிறேன்
- 2 - எந்தன் தாழ்வில்
2. கழுகை போல்
உம் சிறகின்
மேலே
சுமந்து
என்னை தாங்கினிரே
- 2
வழிகளில்
நான் இடறிவிடாமல்
கருணை கரத்தால்
உயர்த்தினிரே
- 2
இயேசுவே
இரட்சகா
ஆசையோடே
வாழ்த்துகிறேன்
- 2 - எந்தன் தாழ்வில்
3. உலகம் என்னை
கைவிட்ட போது
கிருபையாலென்னை
தாங்கினிரே
- 2
மனிதர்
யாவரும் மறந்திட்ட
போதும்
மறவாமல்
என்னை நினைத்தவரே
- 2
இயேசுவே
இரட்சகா
ஆசையோடே
வாழ்த்துகிறேன்
- 2 - எந்தன் தாழ்வில்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment