08 June 2023

உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       உள்ளம் ஆனந்த கீதத்திலே

            வெள்ளமாகவே பாய்ந்திடுதே

            எந்தன் ஆத்தும நேசரையே

            என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

 

2.         பாவப் பாரம் நிறைந்தவனாய்

            பல நாட்களாய் நான் அலைந்தேன்

            அந்த பாரச் சிலுவையிலே

            எந்தன் பாரங்கள் சுமந்தவரே

 

3.         மலை போன்றதோர் சோதனையில்

            மகிபன் அவர் கைவிடாரே

            கல்வாரியின் அன்பினாலே

            கனிவோடென்னை அணைத்திடுவார்

 

4.         உலகம் முடியும்வரை

            உந்தனோடிருப்பேன் நேசரையே

            வாக்கு மாறிடா நேசரையே

            நம்பிடுவாய் துணை அவரே

 

5.         பல ஆசையின் ஆழியிலே

            அழிந்தே மனம் சோர்ந்திடுதே

            அந்த பாசக் கரங்களிலே

            அணைத்தே என்னைத் தூக்கினாரே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...