16 June 2023

இருளில் இருக்கும் ஜனங்களும்

இருளில் இருக்கும் ஜனங்களும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இருளில் இருக்கும் ஜனங்களும்

            மரண திசையில் இருக்கும் மனிதரும்

            வெளிச்சத்தை கண்டிட

            ஒளியாய் வந்தீரே

 

                        இம்மானுவேல் என்னோடு இருப்பவரே

                        இயேசுவே பாவ இருள் நீக்கினீரே

 

1.         எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரே

            உம்மை உலகம் அறியவில்லை

            உம் சொந்தம் ஏற்கவில்லை

            உம் நாமத்தை அறிந்த என்னை

            உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர்

 

2.         எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரே

            என்னில் அன்புக்கூர்ந்ததினால்

            என்னை தெரிந்து கொண்டதினால்

            உம் சாயலாய் என்னை மாற்றிட

            இந்த பூமியில் நீர் பிறந்தீர்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...