07 June 2023

என் மீது அன்புகூர்ந்து

என் மீது அன்புகூர்ந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

 

                    என் மீது அன்புகூர்ந்து

                        பலியானீர் சிலுவையிலே

                        எனக்காய் இரத்தம் சிந்தி

                        கழுவினீர் குற்றம் நீங்க

 

1.         பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்

            உமக்கென்று வாழ்ந்திட

            ஆராதனை உமக்கே

            அனுதினமும் உமக்கே

 

2.         பிதாவான என் தேவனே

            தகப்பனே என் தந்தையே

            மாட்சிமையும் மகத்துவமும்

            உமக்குத்தானே என்றென்றைக்கும்

 

            வல்லமையும் மகிமையும்

            தகப்பனே உமக்குத்தானே

 

3.         உம் இரத்தத்தால் பிதாவோடு

            ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்

            கறைபடாத மகனாக

            நிறுத்தி தினம் பார்க்கின்றீர்

 

            வல்லமையும் மகிமையும்

            தகப்பனே உமக்குத்தானே

 

4.         மாம்சமான திரையை அன்று

            கிழித்து வழி திறந்தீர்

            மகாமகா பரிசுத்தமும் திருச்சமுகம்

            நுழைய செய்தீர்

 

            வல்லமையும் மகிமையும்

            தகப்பனே உமக்குத்தானே

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...