மீட்கப்பட்டேன் நான் கர்த்தராலே

மீட்கப்பட்டேன் நான் கர்த்தராலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மீட்கப்பட்டேன் நான் கர்த்தராலே

            ஆனந்த களிப்புடன் பாடிடுவேன்

            நித்திய மகிழ்ச்சி என் தலையின் மேலே

            சந்தோசம் துதி கீதமே

            சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போயிற்றே

            பாவம் சாபம் நீங்கிப்போயிற்றே

            சீயோனுக்கு திரும்பி வந்திடுவேன்

            களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன்

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        ஆராதனை இயேசு ராஜாவுக்கே

                        அல்லேலூயா ஆராதனை

                        என் இயேசு ராஜாவுக்கே

                        என் இயேசு ராஜாவுக்கே

 

1.         காத்திருந்தேன் கர்த்தர் பாதத்திலே

            கழுகைப்போல் புதுபெலன் அடைந்துவிட்டேன்

            செட்டைகளை அடித்து எழும்பிடுவேன்

            கர்த்தருக்குள் செயல்படுவேன்

            ஓடினாலும் நான் இளைப்பதில்லை

            நடந்தாலும் சோர்ந்து நான் போகமாட்டேன்

            பெலத்தின் மேல் நான் பெலன் அடைந்து

            தேவன் சந்ததியில் காணப்படுவேன்

 

2.         நம்பிடுவேன் கர்த்தர் இயேசுவையே

            சீயோன் பர்வதம் போல் நிலைத்திருப்பேன்

            கர்த்தரை உறுதியாய் பற்றிக் கொள்வேன்

            செட்டைகளில் மறைந்திருப்பேன்

            சிங்கத்தின் மேல் நான் நடந்திடுவேன்

            சர்பங்கள் தீகளை மிதித்திடுவேன்

            சத்துருவின் வல்லமைகள் மேற்கொள்ளுவேன்

            ஜெயமாக வாழ்ந்திடுவேன்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு