16 June 2023

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்தார்

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்தார்

            எண்ணில்லா ஆனந்தம்

            இப்பூவியினை மீட்க தாழ்மையாய் பிறந்தார்

            எண்ணில்லா பேரின்பம்

 

                        ஆனந்தம் பேரின்பம் மண்ணில் சமாதானம்

                        ஆனந்தம் பேரின்பம் மீட்பின் அடையாளம்

 

1.         தூதர்கள் போற்றிடவே கேரூபின் வணங்கிடவே

            வானாதி வானங்களை ஆட்சி செய்தவரே

            பாவத்தில் மூழ்கின எம்மையும் கண்ணோக்கி பார்த்தவரே

            உம்மைப்போல் நாங்களும் மாறிடவே

            பிறந்தீர் பிறந்தீர் இரட்சிப்பின் வாசலாய்

 

2.         மேய்ப்பர்கள் கண்குளிர ஞானிகள் கண்டுணர

            ஏரோது கண் கலங்க தூதர்கள் விண் அதிர

            இருளின் தீய பிடியினில் வாழும் மாந்தரை

            என்றென்றும் நித்திய வாழ்விற்காய்

            மீட்டீர் மீட்டீர் மகிமையின் ஜோதியாய்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...