29 June 2023

ஓசான்னா முழக்கம் கேட்குதம்மா

ஓசான்னா முழக்கம் கேட்குதம்மா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஓசான்னா முழக்கம் கேட்குதம்மா

            இயேசுவின் வருகை தெரியுதம்மா

            ஒருமுறை அவர் வந்தார் நம்மை மீட்பதற்கு

            மறுமுறை அவர் வருவார் நம்மை அழைத்து செல்வதற்கு

                        ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

                        ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

 

1.         அதிசயம் ஆயிரம் நடக்குதம்மா - அது

            ஆண்டவர் வருகையை பேசுதம்மா

            அடிமை வாழ்வினி போதுமம்மா - அவர்

            ஆட்சியில் மகிழ்ந்து வாழ்வோமம்மா  - ஓசான்னா

 

2.         விண்ணொளி வானில் தோன்றுமம்மா - அன்று

            விண்ணவர் கூட்டம் திரளுமம்மா

            சாத்தானின் ஆட்சி விழுந்ததம்மா - அன்று

            சத்தியமே நின்று ஜெயித்ததம்மா - ஓசான்னா

 

3.         ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியம்மா - இயேசு

            அரசுக்கு முடிவே இல்லையம்மா

            பரிசுத்தர் இயேசு உன் அரசரம்மா - அவர்

            அரசுக்குள் வாழ நீ ஆயத்தமா? - ஓசான்னா

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...