06 June 2023

கேட்டேன் கேட்டேன் இன்று

கேட்டேன் கேட்டேன் இன்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   கேட்டேன் கேட்டேன் இன்று

                        எப்போது என் இயேசு வருவார் என்று

                        பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று

                        எப்போது தரிசனம் தருவார் என்று

 

1.         வானத்தைக் கேட்டேன்

            எப்போது என் இயேசு வருவார் என்று

            அது வாடியே போனது தெரியாது என்றது

            காரணம் அவர் வருகையில்

            வெந்து அழிந்து போவோம் என்று

 

2.         கடலினைக் கேட்டேன்

            எப்போது என் இயேசு வருவார் என்று

            அது கதறியே அழுதது தெரியாது என்றது

            காரணம் அவர் வருகையில்

            வெட்டாந்தரையாய் போவோம் என்று

 

3.         மலைகளைக் கேட்டேன்

            எப்போது என் இயேசு வருவார் என்று

            அது மலைத்தே நின்றது தெரியாது என்றது

            காரணம் அவர் வருகையில்

            பெயர்ந்து நொறுங்கிப் போவோம் என்று

 

4.         மேகத்தைக் கேட்டேன்

            எப்போது என் இயேசு வருவார் என்று

            அது வேகமாய் சென்றது தெரியாது என்றது

            காரணம் அவர் வருகையில்

            வாகனமாக வருவோம் என்று

 

5.         தூதரைக் கேட்டேன்

            எப்போது என் இயேசு வருவார் என்று - தேவ

            அவர் ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றனர்

            காரணம் அவர் வருகையில்

            தாங்களும் கூட வருவோம் என்று

 

6.         இயேசுவைக் கேட்டேன்

            எப்போது தேவா உம் வருகை என்று

            அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்

            இந்நாட்களிலே வருகையின் நாட்களிலே

            ஒருவரும் அறியார் என்றார் - ஆனாலும்

            இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...