13 January 2026

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விழுகுது விழுகுது எரிகோ கோட்டை - அல்லேலுயா

            எழும்புது எழும்புது இயேசுவின் படை - Jesus - 2

 

                        துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்

                        துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் - 2

 

1.         யோசுவாவின் சந்ததி நாமே

            தேசத்தை சுதந்தரிப்போமே - 2

            உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு

            ஊர் ஊராய் வலம் வருவோமே - 2 - துதிப்போம்

 

2.         கால் மிதிக்கும் எவ்விடத்தையும்

            கர்த்தர் தந்திடுவாரே - 2

            எதிர்த்து நிற்க எவராலுமே

            முடியாது என்று வாக்குரைத்தாரே - 2 - துதிப்போம்

 

3.         மோசேயோடு இருந்தது போல

            சேனைகளின் கர்த்தர் நம்மோடு - 2

            தளபதியாய் முன் செல்கிறார்

            தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் - 2 - துதிப்போம்

 

4.         அச்சமின்றி துணிந்து செல்வோமே

            அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே - 2

            கர்த்தர் வார்த்தை நம் வாயிலே

            நிச்சயமாய் வெற்றி பெறுவோம் - 2 - துதிப்போம்

 

5.         தேசத்து எதிரிகளெல்லாம்

            திகில் பிடித்து நடுங்குகின்றனர் - 2

            கர்த்தர் செய்யும் அற்புதங்களை

            கேள்விப்பட்டு கலங்குகின்றனர் - 2 - துதிப்போம்

 

6.         செங்கடலை வற்றச் செய்தவர்

            சீக்கிரத்தில் வெற்றி தருவார் - 2

            யோர்தானை நிற்கச் செய்தவர் - நம்

            பாரதத்தை ஆளுகை செய்வார் - 2 - துதிப்போம்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...