விதைக்க
ஒரு காலம் உண்டானால்
அறுக்க ஒரு காலம் உண்டல்லோ
- 2
கண்ணீரோடு விதைப்பாயானால்
கெம்பீரமாய் அறுத்திடுவாயே
- 2
விதைப்பும் அறுப்பும் ஒழிவதில்லையே
அல்லேலூயா அல்லேலூயா - 2
1. துன்மார்க்கத்தை
விதைப்பாயானால்
தீவினையை அறுத்திடுவாயே
- 2
நன்மைகளை விதைப்பாயானால்
ஆசீர்வாதம் வந்து சேருமே - 2 - விதைக்க
2. கண்ணீருடன் இரத்த வேர்வை
இயேசு நாதர் விதைத்திட்டாரே
- 2
அறுவடைக்கு விளைந்து நிற்கும்
வயல் நிலங்கள் மிகுதி அல்லவோ - 2 - விதைக்க
3. ஈசாக்கு விதைத்த போது
நூறு பங்கு விளைந்திட்டதே
- 2
இந்த நேரம் அறுவடை நேரம்
களஞ்சியத்தில் சேர்த்திடுவாயே
- 2 - விதைக்க
YouTube Link
No comments:
Post a Comment