13 January 2026

விண்மகிமை கண்முன் கண்டேன்

விண்மகிமை கண்முன் கண்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்மகிமை கண்முன் கண்டேன்

            விண் மன்னன் இயேசென்னை

            அழைக்கின்றார்

 

                        மண்ணுலகின்பங்கள் மயையல்லோ

                        வீணானதே மாறிடுதே

                        விண் ஜீவ கிரிடமோ என் சொந்தம்.

 

1.         மரண யோர்தான் புரண்டு வந்தால்

            மாலுமி இயேசுவின் கப்பல் ஏறி

            அக்கரையோரம் நான் சென்றிடுவேன்

            அங்கே வரவேற்பு காத்திருக்கும்

 

2.         பரதீசிலே பல காட்சிகள்

            பார்த்துப் பரவசம் பொங்கிடுமே

            கண்ணீர் கவலையும் அங்கில்லையே

            கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன்

 

3.         ஜீவஜல நதி ஓடிடும்

            ஜீவ தண்ணீரால் என் தாகம் தீரும்

            கர்த்தரின் கைகோர்த்து நடத்திட

            காத்து தவிக்கின்ற தென்னுள்ளமே

 

4.         புதிய கனி புசித்திடுவேன் பூக்கள்

            நடுவே உலாவிடுவேன் தூதர்கள்

            பக்தர்களோடு வாழும் தூய பேரின்பத்தை நாடுகிறேன்

            தேவ சமூகம் இளைப்பாறுதல்

 

5.         எத்தனையோ பிரதி பலன்கள்

            உத்தம ஊழியர் பெற்றிடவே

            ஓட்டம் ஜெயத்தோடு முடித்திடும்

            ஒன்றே எனதாவல் இயேசு போதும்

 

 

- சாராள் நவரோஜி

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...