விசுவாச
பாதையில் தினமும் நடந்திடுவேன்
நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து
ஓடிடுவேன் - 2
பாடுகள் என்ன செய்யும்
துன்பங்கள் என்ன செய்யும்
- 2
எதுவும் என்னை
அசைப்பதில்லை
அன்பை விட்டு
பிரிப்பதில்லை - விசுவாச
1. வார்த்தை என்னும் மாத்திரையை
தினமும் சாப்பிடுவேன் - 2
வாழ்நாளெல்லாம் சுகமாகவே
வாழ்ந்து பெலனடைவேன் - 2
உம் தழும்புகளாலே சுகமானேன்
வார்த்தையினாலே பெலனானேன் - 2 -
பாடுகள்
2. கர்த்தருக்குள் எப்பொழுதும்
சந்தோஷமாயிருப்பேன்
- 2
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து
கனிகள் கொடுத்திடுவேன் - 2
நல்ல நிலத்தின் விதை போல
நூறு மடங்கு பலன் கொடுப்பேன் - 2 -
பாடுகள்
3. விசுவாச கப்பலிலே
பயணம் செய்கின்றேன் - 2
போர்ச் சேவகனாய் பணி செய்து
ஓட்டத்தை முடித்திடுவேன் - 2
நீதியின் கிரீடம் எனக்கு உண்டு
நிரந்தர வாழ்வு எனக்கு உண்டு - 2 -
பாடுகள்
YouTube Link
No comments:
Post a Comment