08 January 2026

விண் தூதர் ஆர்ப்பரிக்கவே

விண் தூதர் ஆர்ப்பரிக்கவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       விண் தூதர் ஆர்ப்பரிக்கவே

            பண்பாடி மகிழ்ந்திடவே

            வெண்ணாடை தரித்து இயேசுவோடு

            ஆடிப் பாடி அகமகிழ்வேன்

 

                        துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

                        மகிழுவேன் ராஜாதி ராஜாவுடனே

 

2.         பளிங்கு நதியோரத்தில்

            ஒளிவீசும் மகிமையோடு

            தூதர் தொனியுடன் நானும் சேர்ந்து

            ஆடிப்பாடி அகமகிழ்வேன்

 

3.         ஜெயம் கொண்ட பரிசுத்தனாய்

            ஜெயம் கொண்ட கிறிஸ்துவோடு

            பிதாவின் சிங்காசனத்திலே

            ஆடிப்பாடி அகமகிழ்வேன்

 

4.         ஜீவ விருட்சம் அங்க உண்டு

            ஜீவ நதியில் தாகம் தீர்ப்பேன்

            ஜீவ கிரீடத்தை நான் பெறும் நாளில்

            ஆடிப்பாடி அகமகிழ்வேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...