வெள்ளை
குதிரையின் மேல்
ஏறி வருகிறார்
ராஜாதி
ராஜா கர்த்தாதி கர்த்தா
மகிமையின்
தேவன் இயேசு - 2
எக்காளம் ஊதிய சேனைகள் தொடர்ந்திட - (2)
யுத்த
வீரனாய் சாத்தானை அழிக்க
இயேசு
வருகிறார் - 2 - வெள்ளை
1. அக்கினி ஜூவாலை
கண்கள்
என் ஆசை நேசர் வருகிறார் - 2
நீதியின் சூரியன் வருகிறார்
கிரீடங்கள் மேல் ஜெயகிரீடங்கள்
அணிந்து இயேசு வருகிறார் - வெள்ளை
2. இரத்தத்தில் தோய்த்த வஸ்திரம்
என் உயிரான இயேசு வருகிறார் - 2
சத்தியமுள்ளவர் வருகிறார்
கோடான கோடி குதிரைகள் சூழ
வார்த்தை வருகிறார் - வெள்ளை
3. வாயினால் கூர்மை பட்டயம்
என் ஆத்தும நேசர் வருகிறார் - 2
யுத்தத்தில் வல்லவர் வருகிறார்
அக்கினிக் கடலில் சாத்தானின்
சேனையை அழிக்க வருகிறார் - வெள்ளை
4. மகிமையின் வெள்ளை சிங்காசனத்தில்
அமர்ந்திருந்தவர் வருகிறார் - 2
ஜீவனுள்ளவர் வருகிறார்
ஜீவாதிபதியாய்
நியாயந்தீர்த்திட
இயேசு வருகிறார் - வெள்ளை
No comments:
Post a Comment