02 January 2026

நன்மையின் தேவன் நடத்திடுவார்

நன்மையின் தேவன் நடத்திடுவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்மையின் தேவன் நடத்திடுவார்

                        நன்மையும் கிருபையும் தொடரச் செய்வார்

                        வருத்தங்கள் இல்லை வறட்சியும் இல்லை

                        வருங்காலமெல்லாம் சுகவாழ்வே

 

1.         காலங்கள் அவர் கையில் இருப்பதனால்

            காயமெல்லாம் மறையும் வாழ்வு மலரும் - 2

            நன்மைகள் குறைவதுமில்லை

            கிருபைகள் விலகுவதில்லை

            நலமாய் வாழச் செய்வார் - நம் தேவன்

            நலமாய் வாழச் செய்வார் - நன்மையின்

 

2.         ஏக்கங்கள் தீரும் எண்ணங்கள் வாய்க்கும்

            எதிர்பார்க்கும் முடிவை தந்திடுவார் - 2

            துன்பங்கள் தொடருவதில்லை

            தொல்லைகள் நிலைப்பதுமில்லை

            சுகமாய் தங்கச் செய்வார் - நம் தேவன்

            சுகமாய் தங்கச் செய்வார் - நன்மையின்

 

3.         வாசல்கள் திறக்க முன் நடப்பார்

            வார்த்தையை அனுப்பியே சுகம் தருவார் - 2

            வாழ்ந்திடும் காலமெல்லாம்

            வெற்றியாய் வாழ வைத்தே

            வானில் கொண்டு செல்வார் - நம் தேவன்

            வானில் கொண்டு செல்வார் - நன்மையின்

 

 

- Albert Robinson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...