19 January 2026

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜீவனுள்ள தேவன் தங்கும்

            பரலோக எருசலேம்

            சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் - (2)

 

                        பரலோகம் நம் தாயகம்

                        விண்ணகம் நம் தகப்பன் வீடு - 2

 

1.         கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் - (2)

            பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் - (2)

 

                        பரிசுத்தர் பரிசுத்தர் - (2)

                        பரலோக தேவன் பரிசுத்தர் - நம் - (2)

 

2.         பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் - (2)

            திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் - (2)

            அல்லேலூயா ஓசன்னா - (2)

 

                        கொண்டாட்டம் கொண்டாட்டம்

                        நம் தகப்பன் வீட்டில் - 2

 

3.         பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே - (2)

            எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி அங்கே - (2)

 

                        நீதிபதி கர்த்தரே - (2)

                        எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி - (2) - நம்

 

4.         புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே - (2)

            நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே - (2)

 

                        இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் - (2)

                        இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் - (2)

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...