ஜீவனுள்ள
நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு - அதை
அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்
1. இயேசுவும் தனக்காய் வாழாமல் - அவர்
நமக்காய் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்கு தந்தாரே
இதற்கு பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் - இயேசுவுக்காய்
2. ஊழியம் செய்வது பாக்கியமே - அதின்
பலனோ இன்று
நாம் அறியோமே
கர்த்தர் ஓர் நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்ட வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் - துள்ளிடுவோம்
3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான் நலமாய் இருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ - இன்றே வா
4. உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்றும்
ஓயாது உழைத்திடுவோம் - இயேசுவுக்காய்
- S.J.C. Selvakumar
YouTube Link
No comments:
Post a Comment