14 January 2026

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்

ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

            ஏகமாய் துதித்தே போற்றிப் பாடுங்கள் - 2

 

                        தேவன் அளித்த நன்மை பெரியதே

                        கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே - 2

 

1.         இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட

            ஈந்தளித்தீர் உந்தன் கிருபை - 2

            இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

            என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் - 2 - ஜாதிகளே

 

2.         ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்

            சேதமின்றி என்னைக் காத்தாரே - 2

            ஜீவியப் பாதையில் தேவை தந்து

            ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் - 2 - ஜாதிகளே

 

3.         பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி

            சாவு பயம் யாவும் போக்கினார் - 2

            சோதனை வேதனை சூழ்கையில்

            சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் - 2 - ஜாதிகளே

 

4.         எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்

            சொந்த பிள்ளைகளாக மாற்றினார் - 2

            நாடியே வந்தென்னை ஆதரித்து

            வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட - 2 - ஜாதிகளே

 

5.         வானம் பூமி யாவும் மாறிப்போகும் ஓர் நாள்

            வானவரின் வாக்கு மாறாதே - 2

            நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்

            சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை - 2 - ஜாதிகளே

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...