11 April 2024

தரிசனத்தின் தேவனே உம்மைத்

தரிசனத்தின் தேவனே உம்மைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தரிசனத்தின் தேவனே

            உம்மைத் துதிக்கின்றோம்

            ஆத்ம பாரம் தந்தவரே

            தான் உம்மில் மகிழ்கிறோம்

            ஜெபம் கேட்கும் இரட்சகரே

            நன்றி சொல்கிறோம்

            இந்து தேசம் உந்தன் சொந்தம்

            என்று சொல்கிறோம்

 

                        போற்றுவோம் (2) உம்மைப் போற்றுவோம்

                        பாடுவோம் உம்மைப் பாடுவோம்

 

1.         பாரதத்தின் எல்லைகளை அணுகச் செய்தீர்

            பாஷைகளை கற்றுக் கொள்ள ஞானம் தந்தீர்

            பாதகங்கள் அணுகாது காத்துக் கொண்டீர்

            பரவசம் உள்ளங்களில் பெருகச் செய்தீர்

 

2.         அடைபட்ட கதவுகள் திறந்து தந்தீர்

            ஆத்துமாக்கள் கொள்ளையாக எமக்குத் தந்தீர்

            ஆலயங்கள் கிராமங்களில் எழும்பச் செய்தீர்

            ஆராதித்து உம்மை நாங்கள் தொழுகச் செய்தீர்

 

3.         அற்பமான ஆரம்பமே அன்று கண்டோம்

            அற்புதங்கள் ஆயிரம் இன்றும் கண்டோம்

            தற்பரனே உம் கரத்தின் வல்ல செயல்கள்

            தரணியோர் அறிந்திட எடுத்துச் சொல்வோம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...