02 April 2024

சோதனைகள் சூழ்கின்ற நேரத்தில்

சோதனைகள் சூழ்கின்ற நேரத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   சோதனைகள் சூழ்கின்ற நேரத்தில்

                        சோர்ந்திடாத உள்ளத்தோடு நின்றிடு

                        இயேசு என்னும் நாமம் கொண்டு வென்றிடு

 

1.         பசித்த சிங்கம் எழும்பி நின்ற போதிலும்

            தானியேலின் உள்ளம் கலங்கவில்லையே

            ஆணையிட்ட கர்த்தர்

            வாயின் வார்த்தையால்

            வலிய சிங்கம் வாய் திறக்கவில்லையே

            வாயை கட்டும் கர்த்தர் நம் பட்சத்தில் நிற்க

            சீறிவரும் சிங்கம் கண்டு மிரள்வதா

            சோதனைக்கு தலை வணங்கி செல்வதா

 

2.         செங்கடலும் வழி மறித்து நின்றிட

            சீறிவரும் பார்வோன் படை சூழ்ந்திட

            வலிய தேவன் எளிமையான கோலினால

            கடல் பிளந்து வழி அமைக்கவில்லையா

            யுத்தம் செய்யும் கர்த்தர் நமக்கு முன்னே செல்ல

            சத்தம் கண்டு தேவபடை திகைப்பதா

            விசுவாசத்தில் தளந்து விலகிச் செல்வதா

 

3.         தேசமெங்கும் பஞ்சம் சூழ்ந்த போதிலும்

            தேவ மனிதன் எலியா வயிறு காய்ந்ததா

            தேவஜனம் பயணம் செய்து போகையில்

            அடைத்து நின்ற அரங்கு உடைந்ததில்லையா

            வாக்குத்தத்தம் செய்த வலிமையுள்ள கர்த்தர்

            வழி நடத்தி செல்லும் போது கலக்கம் ஏன்

            அவர் வழி நடக்க இன்னும் தயக்கம் ஏன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...