சோபன கீதம் பாடுவோம்

சோபன கீதம் பாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

305. இராகம்: கமாசு.                                         ஆதி தாளம்

 

                             பல்லவி

 

                   சோபன கீதம் பாடுவோம்;-சுவிசேச-மேன்மை

                        சொல்லிக் களிகொண்டாடுவோம்.

 

                             அனுபல்லவி

 

            மாபரனான இயேசு வந் துற்பவித்து மாசு

            மாறும் நல் வழிதன்னைக் கூறும் விசேஷம்,

            மன்பதை கதி பெற்ற கின்ப சந்தோஷம்.-சோபன

 

                             சரணங்கள்

 

1.         சிலுவைக் கொடி விரித்து செங்கோ லோச்சி

            ஜெயமாம் முடிதரித்து,

            அலகை[1]தனைச் சங்கரித்து-ஒரு குடைக்கீழ்

            அவனி முழுதும் வரித்து[2],

            கொலுவாய்க் கிறிஸ்திருப்பார்-குவலயமும்[3] புரப்பார்[4],

            கூஷுடன் தீவு தர்ஷுஷெங்கு மிருப்பார்,

            கொண்டுவந்தே தங்கள் காணிக்கை நிறுப்பார். - சோபன

 

2.         மீட்கப்படுவார் பாடி-சீயோனுக்க

            மீண்டு வருவார் கூடி;

            வேட்கை யுடனே தேடி,-சத்தமிட்டு

            மேசியாவைக் கொண்டாடி,

            தாட்களெல்லா[5] மடிப்பார், தாழ்ந்து தலை குனிப்பார்,

            சாலவுந் துதிகளை நாவினாற் படிப்பார்,

            சமஸ்தரும்[6] யேசு மத்தியஸ்தரை யடிப்பார். - சோபன

 

- சு.ச. ஏரேமியா, தெல்லிவினை, இலங்கை.

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] பேய்

[2] சேர்த்து

[3] உலகம்

[4] காப்பார்

[5] முழங்கால்

[6] சகலமக்களும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு