01 April 2024

மேசியா கிறிஸ்தேசுவே மீட்பரே

மேசியா கிறிஸ்தேசுவே மீட்பரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   மேசியா கிறிஸ்தேசுவே

                        மீட்பரே எந்தன் கர்த்தரே - 2

 

1.         இன்று உம்மை ஜெனிப்பித்தார்

            இராஜாவாய் உன்னை அபிஷேகித்தார் - 2

            கேளும் பூமியின் எல்லைகளை

            மாளும் ஜாதி ஜனங்களை

                        சொந்தமாய் தருவேன் சுதந்தரிப்பாய் என்று

                        எந்தை பிதா உரைத்தார் - 2

            அல்லேலூயா அல்லேலூயா

            அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

2.         வானோர் பூதலத்தோர்களின்

            முழங்கால் யாவும் முடங்கிடுமே - 2

            இயேசு கிறிஸ்து கர்த்தரென்று

            நாவுகள் யாவும் அறிக்கைப் பண்ணும்

                        எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்

                        இயேசுவின் திரு நாமம் - 2

            அல்லேலூயா அல்லேலூயா

            அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

3.         மன ஆலயத்தில் நமதேசு

            மனுக்குல தெய்வம் வீற்றிருப்பார் - 2

            கடைசி யெக்காளம் தொனித்திடும்

            கழுகைப்போல் எழுந்து பறந்திடுவோம்

                        நம் எஜமான் நம்மை கண்ணிமைப் பொழுதில்

                        நடுவானில் எடுத்துக் கொள்வார் - 2

            அல்லேலூயா அல்லேலூயா

            அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=ASOOH_j-5hk

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...