03 April 2024

இறைவா நீ ஒரு சங்கீதம்

இறைவா நீ ஒரு சங்கீதம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்

                        இணைந்தே பாடிடும் என் கீதம்

                        உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்

                        என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

 

1.         புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்

            இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2

            பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்

            பாடலால் என்னகம் இணைந்திடுமே

 

                        எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்

                        எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா

                        காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி

                        வாழ்வாகி வழியாகி

                        வாராயோ இறைவா (2) - இறைவா

 

2.         கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ

            தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2

            நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை

            நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்

                        தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்

                        தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்

                        அருளாளன் நீயின்றி அழகேது என்னில்

                        அதை நானும் அடையாமல்

                        விடிவேது மண்ணில் (2) - இறைவா

 

https://www.youtube.com/watch?v=ic6vD5xIvw8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...