விண்ணப்பம்
கேட்பவரே
கண்ணீரைக்
காண்பவரே - 2
ஜெபம் கேளும் பதில் தாரும் - 4 - விண்ணப்பம்
1. ஜெப ஆவி என் வாழ்வில் ஊற்றிடுமே
உமதாவி என்னுள்ளே
இறங்கிடுமே - 2
மடை திறந்து வெள்ளம் போல ஊற்ற வேண்டுமே
கண்கள் எல்லாம் கண்ணீர் ஊற்றாய் மாற வேண்டுமே
- 2 - ஜெபம்
2. பல கோடி ஆத்துமாக்கள் அழிகின்றதே
அவர் பேரில் பரிதவிக்க யாரும் இல்லையே
- 2
ஜெப ஆவி எனதுள்ளே இறங்க வேண்டுமே
திறப்பில் நின்று ஜெபிப்பவனாய் மாற்ற வேண்டுமே
- 2 - ஜெபம்
3. மழை வேண்டி பூமியெல்லாம் காத்திருக்குதே
நிலை மாற எனதுள்ளம் ஏங்கி நிற்குதே -
2
பெரு மழையாய் வானம் திறந்து ஊற்ற வேண்டுமே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாற வேண்டுமே
- 2 - ஜெபம்
- Ps. Alwin Thomas
No comments:
Post a Comment