13 January 2026

வினையேன் பாவ வினையேன் சொல்லும்

வினையேன் பாவ வினையேன் சொல்லும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

95. இராகம்: பரசு.                                                                                                  தாளம்: ஆதி.

 

                        பரிசுத்த மத்தேயுவின் திருநாள் - செப்டம்பர் 21ஆம் நாள்

 

                   நினையேன் மனம் நினையேன்” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

          வினையேன்? பாவ வினையேன்? - சொல்லும்

          நினை வற்ற மானிடரே

 

                             அனுபல்லவி

 

                        மனமே தினம் கனமே வளர்

                        கருமங் களின் நிறைவால் - வினையேன்

 

                             சரணங்கள்

 

1.         மத்தேயுவின் திரு நாளிது, மாறும் - குணம் - மாறும்

            பற்றே யிவன் பேரில் பொருள், பரம-வர-மாகும்

            முத்தே மறு பேரும் லேவி, யூரும் நச ரேத்தாம்

            மோன மிகு வான செல்வம், முழங்கும் இது விளங்கும் - வினை

 

2.         ஆயத் துறை தனிலே நின்று, அனந்தம் பொருள் சேர்த்தான்

            மாயப் பிர பஞ்ச மேன்மை, மனம்போ லிவ னடைந்தான்

            நேயத் துடன் இயேசு எனைப் பின் செல் என் றிடவே

            ஓயாப் பல தொல்லைகளை ஒழித்தான் மனங் களித்தான் - வினை

 

3.         விருந், தோம்பினன் கிறிஸ்தே மிக, வியக்கப் பலர் களிக்க

            மருந் தோம்பிடும் அரும் பாவிகள், ஆயக் காரரும் சுகிக்க

            கரும் பேயெனும் பரிசேயர்கள், துரும்பே யென மதிக்க

            பெரும் போதகம் புரிய இயேசு, பெருமா னருள் சொரிய    - வினை

 

4.         எபிரே யரின் பாடை தனில் எழுதிச் சுவி சேடம்

            எங்கும் ஒளி வீசச் செய்த தியல்பே யிவன் போதம்

            அபிரா முடை குலமேவிய, அழகாம் எரு சலையின்

            அருகும் எத்தி யோப்பா தேசம், அனைத்தும் சாட்சி யானான் - வினை

 

5.         எத்தி யோப்பி யாவில் இவன் இரத்தச் சாட்சி யாக

            மத்தி யான வேளைதனில் மரித்தே இவன் சாக

            சலெர்னோ வெனும் இடந் தேகமும், தானே கொண்டுபோக

            ராபட் குஸ்கார்ட் ஆலயத்தில், நாட்டம் பலர் காட்ட - வினை

 

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...