97. இராகம்: ஆங்கிலம். தாளம்: ஆதி.
பரிசுத்த லூக்காவின் திருநாள் - அக்டோபர் 18ஆம் நாள்
“தேவ பிதா எந்தன் மேய்ப்ப னல்லோ” - என்ற மெட்டு
பல்லவி
வேத
சிகாமணி லூக்கா இதோ
விளம்பும் வாக்கியம் கேட்டிடுவீர்.
அனுபல்லவி
ஆதரை
யிலிது அவன் திரு நாள்
அன்புடன் செபம் செய்திடு வீர் - வேத
சரணங்கள்
1. ஆத்தும வைத்தியன்
பவுல் தோழன்
அந்தி யோகியா
செனன மென் பார்
நேர்த்தியாய் மூன்றாம் சுவி சேடம்
நிகழ்ந்த நடபடி எழுதினவன்
- வேத
2. பரிசுத்த ஆவியின் புத்தகமே
பல அப்போஸ்தலர் ஊழியமே
கரிசனை யோடதை
எழுதி விட்டான்
கண்டதும் கேட்டது மாம்
வசனம் - வேத
3. காணா திருந்தும்
இயேசுவை யே
கருத்தாய் நம்பி விசு
வாசித்தான்
மேனான் தேயோப் பிலுவுக்கு மே
விவித நூலிரண்டும் செய்து வைத்தான் - வேத
4. புறசா தியிலிவன் புண்ணிய வான்
புகழ்ச்சி பெற்றோன்
சபை தோறும்
முரசா யிருந்த திரு வசனம்
முழக்கிச் சித்திரம்
வரைந்திடுவான் - வேத
5. ஆரோக் கியந்தரும் ஔடத மாம்
ஆத்தும சக்திக் கரு மருந்தாம்
லூக்கா எழுதிய சுவி
சேடம்
நுட்ப முடனதைப்
படித்திடுவீர் - வேத
6. மக்கே தோனியோ மா அகாயா
மல்குதல் மாத்தியாமா இற்றாலி
ஒக்கவே பிராஞ்சு இன்ஸுவிலும்
ஓதினான் பொயிஷியா தேசமெங்கும் - வேத
7. எண்பதாம் வயதில் பிரசங்கம்
எங்கும் செய்து வரும் போது
வம்பர்கள் கூடிச் சிலுவை செய்ய
வரைந்த ஒலிவ மரம் பார்த்தான் - வேத
8. பாட்ரே வூரில் போதிக்க வும்
பாதகர் கூடி
ஒலிவ மரம்
தூக்கே யென்றார் லூக்காவும்
தொங்கி மரித்துச்
சாட்சி யானார் - வேத
9. அன்பன் சடலம் கான்ஸ் டாண்டின்
நோபிள் பட்டணம்
அடக்கம் செய்தார்
பின்பும் இற்றாலி
தேசம் கொண்டு
பிரிய முடனதைப்
பேணினரே - வேத
- S. உவால்டர் கவிராயர்,
தென்மலை.
No comments:
Post a Comment