14 January 2026

வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பர்

வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

336. இராகம்: ஆல்செபம்                                                     தாளம்: ஆதி

 

            வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பர்

          பாதையும் சத்தியமும் சீவன் நீரே

            பேதையாம் ஏழை யான் பாதை செல்ல

            நீர் அல்லால் யாருமில்லை!

 

                             பல்லவி

 

இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லை

இயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை!


 

                             சரணங்கள்

 

2.         சாபத் தீடானதை வைத்த ஆகான்

            கோபத்திற் காளாய் எதிர்த்த தாத்தான்

            பாவத்தில் சாகாதுயிர் பிழைக்க

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

3.         சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவே

            நித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவே

            சத்துரு சேனையில் வெற்றி தர

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

4.         ஒரே பிதாவை அறிந்திடவே

            பரிசுத்தாவியை பெற்றிடவே

            வேறேது போக்கும் வழியுமில்லை

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

5.         சாத்தான் தலையைச் சிதைப்பதற்கும்

            அவனை வெற்றி சிறப்பதற்கும்

            சமாதானத் தேவ நீர் கிருபை செய்ய

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

6.         நன்மை ஏதும் செய்யத் தெரிகிலேன்

            தின்மையே யான் செய்யத் திறனுளேன்

            நற்செய்கையாகும் உம் சித்தம் செய்ய

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

7.         நினைவுக் குள் பாவம் வருகுதையா

            கனவுக்குள் என்னை இழுக்குதையா

            ஆவி உடல் உயிர் மீட்பதற்கே

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

8.         தேவன் மகத்துவத்தில் மேல் வரவே

            ஜீவ கிரீடத்தைத்தான் தரவே

            அப்போதும் நாங்கள் பாடுவோமே

            நீர் அல்லால் யாருமில்லை - இயேசு

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...