வேண்டாமே மனித காதலே
பாழாக்கும்
இதய போதையே
1. நல்ல
நல்ல குடும்பமெல்லாம்
நரகமாய் ஆனதய்யா
கல்லறையே தஞ்சமென்று
தற்கொலையாய் மாறுதய்யா - வேண்டாமே
2. வாலிபத்தின்
மோகத்திலே
வழி
மாறி போனதைய்யா
துணிந்து
செல்வதெல்லாம்
சரி
என்று தோணுதய்யா
விழுந்த
பின்னாலே மாயை என்று
புலம்புதைய்யா - வேண்டாமே
3. தியேட்டர் பீச் எல்லாம்
சுற்றி
சுற்றி வந்தாலும்
சாத்தானின்
வலையிலே
சிக்கிவிடும் வாழ்க்கையே
கனவுகள்
பொய்யாகும்
வாழ்க்கை
இருளாகும் - வேண்டாமே
4. காயப்பட்ட
நெஞ்சங்களே
தஞ்சம்
என்றும் வந்துவிடு
கல்வாரி
நாயகனை கருத்தாய் தேடி விடு
அணைத்திடும்
கரங்களிலே
கண்ணீர்கள்
மறைந்து விடும் - வேண்டாமே
- Rev. S. Godwin
No comments:
Post a Comment