07 January 2026

வானிலும் பூவிலும் உம்மைப் போல்

வானிலும் பூவிலும் உம்மைப் போல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வானிலும் பூவிலும் உம்மைப் போல்

            வேறொரு தேவனும் இல்லையே

            வாழ்விலும் தாழ்விலும் எங்களை நேசிப்போர்

            உம்மைப் போல் இல்லையே

 

                        உம் மகா அன்பிற்காய்

                        என்ன நான் செய்வதோ

                        ஸ்தோத்திர பலி தந்து உம்மையே

                        வாழ்த்தியே பாடுவேன் அல்லேலூயா

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        அல்லேலூயா அல்லேலூயா

 

1.         ரத்தமே சிந்தியே எங்களை

            சுத்தமாய் மாற்றின தேவனே

            சித்தமே செய்ய நான் என்னையே

            தத்தமாய் படைக்கிறேன் ஏற்றிடும்

 

2.         பாதைகள் மாறியே அலைந்த

            என் வாழ்வினை மாற்றவே அழைத்தீரே

            உம் உயிர்தந்து என் ஜீவனை

            நித்திய ஜீவனாய் மாற்றினீர்

 

3.         உன்னதம் ஏறியே உயர்ந்தீரே

            என்னையும் உம்மைப் போல் மாற்றவே

            தூதர்கள் சூழவே மீண்டுமாய்

            வருவீரே என்னை நித்தியம் சேர்க்கவே

 

 

- Vincent selvakumaar

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...